ஊடகம் எனவும் சிலவேளைகளில் ஊடான் (Gerres filamentosus) என்றும் அழைக்கப்படுவது ஒரு சிறிய மீன் இனம் ஆகும். இது பொதுவாக யப்பான், ஆத்திரேலியா, நியூ கலிடோனியா கிழக்கில் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் கடற்கரைகளில் காணப்படும் மீனாகும். [2]
வெள்ளி நிறம் கொண்ட இந்த மீனின் உடல் முழுவதும் அடர்வாக செதில் கொண்டிருக்கும். இதன் முதுகு துடுப்பின் முன் பகுதி நீண்டு சாட்டை போல் காணப்படும். இந்த சாட்டை போன்ற முதுகுத் துடுப்பினால் தான் இது ஆங்கிலத்தில் ஜெரெஸ் ஃபிலமெண்டோசஸ் என்று அழைக்கப்படுகிறது. சில மீன்களுக்கு இந்த சாட்டைப் பகுதி சேதமடைந்து விழுந்துவிடுவதுண்டு. இவை ஓரடி தாண்டி வளர்வதில்லை.