ஈரல் (சிக்கன்)அசைவ உணவு பிரியர்களுக்கு, ஈரல் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இறைச்சியை விட லிவர் என்று அழைக்கப்படும், ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். இதற்கு காரணம் அதன் சுவையும், மென்மை தன்மையும் ஆகும். ஈரலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. உறுப்பு இறைச்சியில் மிகவும் வலிமை மிக்கது ஈரல் ஆகும்.
Chicken liver:
அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இதில் உண்டு. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டிற்கு இந்த கோழி ஈரல் நம்மை பயக்கும். மேலும், இதில், போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும் அதிக அளவு உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.